முல்லைத்தீவு மாவட்டத்தில் கோவிட் -19 நோய்த்தெற்றின் காரணமாக தங்கள் நாளாந்த வருவாயை இழந்த குடு்ம்பங்களுக்கான உணவுப்பொதிகள் வழங்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. இதன் படி இம் மாவட்டத்தில் மேலும் 55 மாணவர்களின் குடும்பங்களுக்கு இவ்வுதவி வழங்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள,
சிராட்டி குளம் அரசினர்த்தமிழ்க் கலவன் பாடசாலையை சோ்ந்த 12 மாணவர்களின் குடும்பங்களுக்கும்
பழையமுருகண்டி அரசினர் தமிழக் கலவன் பாடசாலையை சோ்ந்த 8 குடும்பங்களுக்கும்
மாமடு ஸ்ரீ வாணி வித்தியாலயத்தை சோ்ந்த 17 மா ணவர்களின் குடும்பங்களுக்கும்
பெ ரிய இத்திமடு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையை சோ்ந்த 5 மாணவர்களின் குடும்பங்களுக்கும்
ஊஞ்சாற்கட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையைச் சோ்ந்த 13 மாணவர்களின் குடும்பங்களுக்குமாக
மொத்தமாக 55 மாணவர்களின் குடும்பங்களுக்கு இவ்வுதவி வழங்க்ப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மன்னார் மாவட்டத்திலும் இவ் உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்ட்டுள்ளது. வன்னியில் உள்ள மன்னார் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களைச் சோ்ந்த பாடசாலைகளை மையப்படுத்திய கிராமங்களுக்கு இதுவரையில் வன்னிச்சங்கம் 1310 மாணவர்களின் குடும்பங்களுக்கு உதவிகளை செய்துள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இவ்வுதவிகள் தாயத்திலிருந்து புலம்பெயர்ந்து வாழும் எம் உறவுகளின் துணையின்றி எம்மால் முடியாத காரியமாகும். தொடர்ந்தும் உதவிகளை வழங்கிக் கொண்டிருக்கும் எம் நேசமிகு உறவுகள் அனைவரையும் இருகரம் கூப்பி வணங்கின்றோம். உங்கள் உதவியால் தங்கள் நாளாந்த உணவை தடையின்றி பெற்ற உறவுகள் உங்கள் நல்வாழ்வுக்காகவும் இறைவனை பிரார்த்திக்கின்றார்கள்.
இவ் இக்கட்டான சூழலில் எம்மோடு கரம் கோர்த்த அத்துணை உள்ளங்களுக்கும் எம் மக்களின் சார்பில் வன்னிச் சங்கத்தின் நன்றிகள்.