3351 Markham Rd ,
Toronto, On, M1X0A6

+1-416-644-1113
info@vcarekids,org

HOT-INFO

Home

கோவிட் -19 நோய்தொற்றை தடுக்கும் வகையில் அமுல்ப்படுத்தப்பட்ட ஊரடங்கு நிலையால் தமது அன்றாட வருமானத்தை இழந்த தொிவு செய்யப்பட்ட மக்களுக்கான உலர்உணவுப்பொதி வழங்கல் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது. இன்று நான்கு பாடசாலைகள் உள்ள சிறிராமபுரம், நெச்சிக்குளம், கள்ளிக்குளம், புதிய சின்னக்குளம் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த 113 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவ் உதவித்திட்டத்தின் முதலாம் கட்ட நிவாரணப்பணிகள் வவுனியா மாட்டத்தில் நிறைவடைந்துள்ளது. அடுத்து முல்லைத்தீவு மாவட்டத்துக்கான பணிகள் ஆரம்பிக்ப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிறிராமபுரம் - திருஞானசம்ந்தர் வித்தியாலயம்     -  42 குடும்பங்கள்
நெச்சிக்குளம் முத்துமாரி வித்தியாலயம்                - 08 குடும்பங்கள்
கருங்காலிக்குளம் அ.த.க பாடசாலை                     - 40 குடும்பங்கள்
புதியசின்னக்குளம் அ.த.க பாடசாலை                   - 23 குடும்பங்கள்
 
ஆகிய பாடசாலைகளைச் சோ்ந்த 113 குடும்பங்களுக்கு இன்று (24) உலர்உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. இதன் அடுத்த கட்டமாக முல்லைத்தீவு மாவட்டத்துக்கான நிவாரணப்பொருட்கள் வழங்கும் ஆயத்தபணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் உதவி வழங்காத, உதவி வழங்க விரும்புவோர் எமது  இணையத்தில் அல்லது  மின் பணபரிமாற்றம் ஊடாக உதவிகளை வழங்க முடியும் என்பதையும் அறியத்தருகின்றோம்.

 

கருங்காலிக்குளம் பகுதியில் உதவிகள் வழங்கப்பட்டபோது:



நெச்சிக்குளம் பகுதியில் உதவிகள் வழங்கப்பட்ட போது:


புதியசின்னக்குளம் பகுதியில் உதவிகள் வழங்கப்பட்ட போது:


சிறிராமபுரம் பகுதியில் உதவிகள் வழங்கப்பட்ட போது:

2020 © V united Care For Kids Inc All Rights Reserved.