வன்னிச்சங்கத்தின் அவசரகால நிவாரண உதவித்திட்டம் முதற்கட்டமாக வவுனியா மாவட்டத்தில் நிறைவடைந்துள்ள இவ் வேளை இன்று முல்லைத்தீவு மாவட்டத்தை சோ்ந்த இரண்டு பாடசாலைகள் அமைந்துள்ள கெக்குதொடுவாய் மகாவித்தியாலயம் மற்றும் கருநாட்டு்க்கேணி அரசினர் தமிழ்க்கலவன் பாடகளைச் சோ்ந்த மாணவர்களின் 68 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் முல்லைத்தீவு மாவட்ட கிராமங்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. பெருவாரியாக கனேடிய தமிழ் உறவுகள் இவ் அவசரகால உதவிக்கு தங்களின் அன்றாட பிரச்சினைகளுகக்கு மத்தியில் எமக்கு உதவி வழங்கிக்கொண்டிருக்கின்றார். அவர்கள் அனைவருக்கும் பயனடைந்த மக்களின் சார்பாக வன்னிச்சங்கத்தின் நன்றிகள். தொடர்ந்தும் உதவி விரும்பும் உறவுகள் உதவிகளை வழங்க முடியும் என்பதையும் அறியத்தருகின்றோம்.
கொக்குத்தொடுவாய் மாக வித்தியாலயத்தில் உலர்உணவுப் பொதிகள் வழங்கிய போது:
கருநாட்டுக்கேணி அ.த.க பாடசாலையில் உலர்உணவுப் பொதிகள் வழங்கிய போது: