3351 Markham Rd ,
Toronto, On, M1X0A6

+1-416-644-1113
info@vcarekids,org

HOT-INFO

Home

கோவிட்- 19 நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் அமுல்ப்படுத்தப்பட்ட ஊரடங்குசட்டத்தினால் இலங்கையில் நாளாந்த ஊதியத்துக்கு பணிபுரிந்து வந்த குடும்பங்கள் தங்கள் அன்றாட உணவுத்தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் பட்டினிச்சாவையும் போசாக்கின்மையையும் எதிர்நோக்கியிருக்கும் இவ் வேளை எமது கேவிட் -19 சிறப்பு உலர்உணவுத்திட்டம் தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் செயற்படுத்தப்படுகின்றது. எமது இத்திட்டத்தின் முல்லைத்தீவு மாவட்டத்துக்கான இரண்டாம் கட்ட உலர்உணவு வழங்கல் ஏப்ரல் 29, 2020 நடைபெற்றது. அதன்போது பாடசாலை செல்லும் சிறுவர்களை உள்ளடக்கிய 400 குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்கப்பட்டது.


அதனடிப்படையில் கீழ்வரும் கிராமங்களைச் சோ்ந்த பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களது 400 குடும்பங்கள் இவ்வுதவியைப் பெற்றுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் கிழக்கு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை
முள்ளிவாய்க்கால் கிழக்கு:  39 குடும்பங்கள்

வட்டுவாய்க்கால் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை
வட்டுவாகல்:  66 குடும்பங்கள்


கள்ளப்பாடு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை
கள்ளப்பாடு: 56 குடும்பங்கள்

முறிப்பு தமிழ் வித்தியாலயம்
முறிப்பு, முள்ளியவளை:  35 குடும்பங்கள்

குராவில் தமிழ் வித்தியாலயம்
குராவில், உடையார்கட்டு:  47 குடும்பங்கள்

சிலாவத்தை தமிழ் வித்தியாலயம்
சிலாவத்தை : 44 குடும்பங்கள்

இருட்டுமடு அரசினர்த தமிழ்க்கலவன் பாடசாலை
இருட்டுமடு: 35 குடும்பங்கள்

வேணாவில் ஸ்ரீ முருகானந்தா வித்தியாலயம்
வேணாவில்,  புதுக்குடியிருப்பு 78 குடும்பங்கள்


ஆகிய பிரதேசங்களைச் சோ்ந்த படசாலை செல்கின்ற மாணவர்களை கொண்ட  400 குடும்பங்களுக்கு இவ் உலர்உணவுப்பொதி வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் உலர்உணவுப் பொதிகள் வழங்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இவ் உதவிப்பணியில் பங்கெடுக்க விரும்பும் கொடையுள்ளம் கொண்ட உறவுகள் எமது இலகு வழி பணப்பரிவார்த்தனைகளாக மின்னஞ்சல் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். மற்றும் இணையங்களூடாகவும் எமது தொலைபேசி இலக்கமான 416-644-1113 என்ற இலக்கத்துக்கு அழைத்து நேரடியாகவும் வழங்கமுடியும்.

அதே நேரம், இங்கு அன்றாடப் பிரச்சினைகளுக்கு மத்தியிலும் எமக்கு உதவி வழங்கிக்கொண்டிருக்கின்ற அனைவருக்கும் பயனடைந்த மக்களின் சார்பாக வன்னிச்சங்கத்தின் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

2020 © V united Care For Kids Inc All Rights Reserved.