3351 Markham Rd ,
Toronto, On, M1X0A6

+1-416-644-1113
info@vcarekids,org

HOT-INFO

Home

வன்னிச்சங்கத்தின் கோவிட் -19 சிறப்புத்திட்டத்தின் தொடர்ச்சியாக முல்லைத்தீவு மாவட்டத்தில் மேலும் 271 குடும்பங்களுக்கான உலர்உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்ட்டன.  முல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட  ஒன்பது கிராமங்களை சோ்ந்த 271 குடும்பங்களை சோ்ந்தவர்களுக்கு இவ்வுதவி வழங்கப்பட்டுள்ளது.


வித்தியாபுரம், ஓட்டுசுட்டானில் அமைந்துள்ள ஆறுமுகம் வித்தியாலயத்தில் கல்வி பயன்ற 41 மாணவர்களின் குடும்பங்களுக்கும்

அலைகல்லுப்போட்ட குளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையை சோ்ந்த 8 மாணவர்களின் குடும்பங்களுக்கும்

தம்பனை கற்கிடங்கில் அமைந்துள்ள கரிப்பட்ட முறிப்பு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையை சோ்ந்த 40 மாணவர்களின் குடும்பங்களுக்கும்

வவுனிக்குளம் அம்பாள்புரத்தில் அமைந்துள்ள அம்பாள்புரம் தமிழ் வித்தியாலயத்தை சோ்ந்த 44 மாணவர்களின் குடும்பங்களுக்கும்

வவுனிக்குளம் கொல்லவிளாங்குளம் பகுதியில் அமைந்துள்ள கொல்லவிளாங்குளம் அரசினர்த் தமிழ்க் கலவன் பாடசாலையை சோ்ந்த 27 மாணவர்களின் குடும்பங்களுக்கும்

மாங்குளம் பாலைப்பாணியில் அமைந்துள்ள பாலைப்பாணி தமிழ் வித்தியாலயத்தை சோர்ந்த  10 மாணவர்களின் குடும்பங்களுக்கும்

அக்கராயன் குளம் பகுதியில் அமைந்துள்ள அம்பலபெருமாள்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையை சோ்ந்த 36 மாணவர்களின் குடும்பங்களுக்கும்

அக்கராயன்குளம் ஆரோக்கியபுரத்தில் அமைந்துள்ள ஆரோக்கியகுளம் தமிழ் வித்தியாலயத்தை சோ்ந்த 29 மாணவர்களின் குடும்பங்களுக்கும்

மாங்குளம் புத்துவெட்டுவான் பிரதேசத்தை சோ்ந்த  புத்துவெட்டுவான் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையை சோ்ந்த  36 மாணவர்களின் குடும்பங்களுக்குமாக

மொத்தமாக 271 மாணவர்களின் குடும்பங்களுக்கு இவ்வுதவி எமது இணைப்பாளர்களினால் வழங்கப்பட்டுள்ளது,

கனடாவில் அன்றாடப் பிரச்சினைகளுக்கு மத்தியிலும் எமக்கு உதவி வழங்கிக்கொண்டிருக்கின்ற அனைத்து நல்உள்ளங்ளுகளுக்கு பயனடைந்த, பயனடைந்து கொண்டிருக்கின்ற மக்களின் சார்பாக வன்னிச்சங்கத்தின் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 ஒட்டுசுட்டான், வித்தியாபுரம்,

அலைகல்லுப்போட்ட குளம்

தம்பனை, கரிப்பட்ட முறிப்பு

வவுனிக்குளம் , அம்பாள்புரம்



வவுனிக்குளம், கொல்லவிளாங்குளம்

மாங்குளம் பாலைப்பாணி

அக்கராயன் குளம், அம்பலபெருமாள்குளம்

அக்கராயன்குளம் , ஆரோக்கியகுளம் 

மாங்குளம், புத்துவெட்டுவான்

 

2020 © V united Care For Kids Inc All Rights Reserved.