3351 Markham Rd ,
Toronto, On, M1X0A6

+1-416-644-1113
info@vcarekids,org

HOT-INFO

கோவிட் -19 நோய்தொற்றை தடுக்கும் வகையில் அமுல்ப்படுத்தப்பட்ட ஊரடங்கு நிலையால் தமது அன்றாட வருமானத்தை இழந்த தொிவு செய்யப்பட்ட மக்களுக்கான உலர்உணவுப்பொதி வழங்கல் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது. இன்று நான்கு பாடசாலைகள் உள்ள சிறிராமபுரம், நெச்சிக்குளம், கள்ளிக்குளம், புதிய சின்னக்குளம் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த 113 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க ...
கனடா வாழ் தமிழ் மக்களின் தொடர்ச்சியான ஆதரவுடன் கனடா வன்னிச்சங்கம் ஊரடங்கு காலத்தில் தொழில் வாய்பை இழந்த குடும்பங்களுக்கான நிவாரணத்தை வழங்கி வருவது நீங்கள் அறிந்த விடயமாகும். அதனடிப்படையில் இன்று  22-04-2020 ம் திகதி வவுனியா மாவட்டத்தில் உள்ள 7 கிராமங்களில் வசித்து வருகின்ற பாடசாலை மாணவர்களைக் கொண்ட 163 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டது.
மேலும் படிக்க ...

Covid 19 அனர்த்தத்தின் காரணமாக அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு அமுலாக்கத்தினால் நாளாந்த வருமானத்தினை இழந்து உணவுக்காக கஸ்ரப்படுகின்ற எம் தாயக உறவுகளுக்கு உலர் உணவு வழங்கும் நடவடிக்கையானது கனடா வன்னிச் சங்கத்தினால் வவுனியா மாவட்டத்தில் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டது. இம்மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 20 கிராமங்களில் உள்ள பாடசாலை மாணவர்களைக் கொண்ட 516 குடும்பங்களுக்கு இவ் உதவி வழங்கப்படுகின்றது.

மேலும் படிக்க ...

மு/புதுக்குடியிருப்பு, கைவேலியைச்  சேர்ந்த  4 பாடசாலைக்கு செல்கின்ற பெண் பிள்ளைகளையும், (ஒருத்தி   கொடிய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்)  எறிகணை  வீச்சினால்  காயமடைந்த  குடும்பத் தலைவனையும்,   இறுதி யுத்தத்தில் ஒரே ஒரு மகனையும் காணமல் ஆக்கப்பட்ட நிலையிலுள்ள   இக் குடும்பத்திற்கு      குடிநீர்மற்றும் வீட்டுத் தோட்டத்திற்கான  வாழ்வாதார உதவியாக கிணறு ஒன்றினை “வன்னி விழா-2018” நிதியிலிருந்து  அமைத்து வழங்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க ...

2020 © V united Care For Kids Inc All Rights Reserved.